அய்.அய்.டி. மாணவர்கள் பட்டமளிப்பு விழா வழி காட்டுதல் முறையில் பிரதமர் முன்பு 90 டிகிரி கோணத்தில் குனிந்து தலை வணங்க வேண்டுமாம்!

2 Min Read

புதுடில்லி, ஆக.9 டில்லி இந்திய தொழில் நுட்பக் கழகத்தின்  பட்ட மளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இதனையொட்டி, வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சில வழிகாட்டுதல்கள் குறிப்பாக பிரதமர் முன்பு சரியாக  90 டிகிரி வளைந்து வணங்கவேண்டும் என்பதற்கு பாதுகாப்புத்துறையினர் சுவற்றில் 90 டிகிரி வரைந்து அந்த அளவிற்கு குனிந்து வணங்க பயிற்சி எடுக்கக்கூறியது.  கல்வித் துறையிலும் சமூக வலைதளங்களிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு

பிரதமரின் வருகையை முன்னிட்டு,  டில்லி அய்.அய்.டி.  வளாகம் முழுவதும் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் முழு பாதுகாப்புக் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

நுழைவாயில்கள், வகுப்பறைகள் மற்றும் பட்டமளிப்பு அரங்கம் செல்லும் வழிகளில் மெட்டல் டிடெக்டர்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள், பேராசிரியர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த அளவுக்கு அதிகமான பாதுகாப்புக் கெடுபிடிகளால் ஆய்வகப் பணிகள் மற்றும் மாணவர்களின் அன்றாட நகர்வுகள் பெரிதும் பாதிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

சர்ச்சையை ஏற்படுத்திய வழிகாட்டுதல்கள்

பட்டமளிப்பு விழாவின் ஒத்திகை யின் போது, பிரதமர் மேடையில் இருக்கும்போது மாணவர்கள் பின்பற் றுவதற்காக வழங்கப்பட்ட சில அறிவுறுத்தல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன:

பிரதமரிடம் பட்டம் மற்றும் பதக்கங் களைப் பெறும்போது, மரியாதையைச் செலுத்தும் விதமாகத் தலையை 90 டிகிரி வரை சாய்த்து வணங்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

வேத மந்திரங்கள்…

பிரதமர் வரும் போதும் அவர் மேடையில் பேச எழுந்த போதும் அவர் கீழிறங்கிச் செல்லும் போதும் மூன்று முறை வேத மந்திரங்கள் ஓதப்பட்டதாகவும், அந்நேரத்தில் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

“நாட்டின் முதன்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான அய்.அய்.டி-யில், மதச் சார்பற்ற மரபுகளைத் தாண்டி சடங்கு சார்ந்த நெறிமுறைகளையும், ‘எவ்வளவு தூரம் தலை வணங்க வேண்டும்’ போன்ற தனிநபர் வழிபாட்டையும் திணிப்பது நிறுவனத்தின் தன்னாட்சியையும் மாணவர்களின் சுயமரியாதையையும் பாதிக்கும் செயல்” என சில மாணவர் களும் கல்வி ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

எதிர்மறையான சமூகத் தாக்கம்

சமீபகாலமாக நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றிய அரசின் கலாச்சார மற்றும் அரசியல் தலையீடுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் மத்தியில் இந்த நிகழ்வு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இளைஞர்களைச் சென்றடையும் நோக்கிலான அரசியல் நகர்வு களுக்கு மத்தியில், இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *