கண்ணந்தங்குடி கீழையூர் பள்ளி வளர்ச்சி குழு ஆலோசனைக் கூட்டம்

1 Min Read

கண்ணந்தங்குடி, ஆக. 8– கண்ணந்தங்குடி கீழையூர் பள்ளி வளர்ச்சி குழு, மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆலோ சனைக் கூட்டம் 5.8.2026 அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை  பள்ளி வளாகத்தில் நடை பெற்றது

உயர்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி நிகழ்விற்கு தலைமை ஏற்று உரை யாற்றினார் கல்வி வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளரும் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர்  சி.மாரிமுத்து முன்னிலை ஏற்று உரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தஞ்சை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வரும் மருத்துவ துறை மேனாள் இயக்குநர் டாக்டர் கி.கலைச்செல்வி, கூட்டுறவுத்துறை ஓய்வு பெற்ற துணைப் பதிவாளர் கோ.சீனிவாசன், தஞ்சாவூர் பொறுப்பு மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றோர்கள் ஆசிரியர் பெருமக்கள் உரையாற்றினார்.

ஆசிரியர் தமிழரசி அனைவரை யும் வரவேற்று உரையாற்றினார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பிச்சைக்கண்ணு, ஆர்.ஏ.டி. மகேந்திரன், மேனாள் ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன், யுனிவர்சல் ரங்கராஜன், செந்தில்குமார், ராவு, ஊராட்சி மன்ற உறுப்பினர் வேணுகோபால்,வென்னீரன், கர்ணன், கந்தசாமி,இரா.வெற்றி குமார், குணசேகரன் உள்ளிட்ட பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்ற சிறப்பித்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர் வில் தொடர்ந்து 100% மாணவர்கள் தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்கள் ஒத்துழைத்த பெற்றோர்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக் கப்பட்டது.

மேலும் பள்ளி வளர்ச்சி குழு சார்பில் பள்ளிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை நன்கொடைகள் மூலம் பெற்று வழங்குவது எனவும், கல்வித் தரத்தையும்  மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவி களையும் செய்வதற்கு பள்ளி வளர்ச்சி குழு தயாராக இருக்கிறது ஆசிரியர் பெருமக்களும் பெற்றோர்களும் மாணவர்களும் ஒத்துழைப்பு வழங்கி நமது பள்ளியை மேலும் வளர்ச்சி பெற எல்லாத் துறையிலும் வளர்ச்சி பெற இணைந்து உழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *