டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* உதயநிதி ஸ்டாலின் – காவிரி விவகாரம்: சட்டப் பேரவையில் காவிரி நீர் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக் கைக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். கருநாடக அரசின் நிலைப்பாட்டால் தமிழ்நாட்டின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்காக அரசு தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ‘க்யா போல்தி பப்ளிக்’ (நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்) பிரச்சாரம்: காக்ரோச் ஜனதா கட்சி (CJP), மக்களின் கருத்துகளை நேரடியாக அறிய செப்டம்பரில் ‘க்யா போல்தி பப்ளிக்’ என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்குகிறது. வேலைவாய்ப்பு, கல்வி, வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து மக்களின் கருத்துகள் சேகரிக்கப்படும் என கட்சி அறிவித்துள்ளது.
* நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: மாணவர் போராட்டங்கள் மீதான காவல்துறை நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் மாநிலங்களவை இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து ராகுல் காந்தியுடன் அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆலோசனை நடத்தினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எப்சிஆர்ஏ மசோதா குறித்து சிதம்பரம். எப்சிஆர்ஏ (FCRA) திருத்த மசோதா இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை; இனியும் தாக்கல் செய்யப்படாமல் போகலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்தார். அமித்ஷாவின் வருகையின்மை, சிஜேபி போராட்டம், தேர்வுச் சட்டம், 370ஆவது பிரிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் அவர் விமர்சித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகாரில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்தது: தேஜஸ்வி பீகாரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்துள்ளதாக குற்றம்சாட்டிய ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி, அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து என்.டி.ஏ. அரசு அலட்சியமாக மவுனம் காக்கிறது என்று விமர்சித்தார்.
தி இந்து:
* எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் வருமான அடிப்படை யிலான கிரீமிலேயருக்கு எதிர்ப்பு: எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் வருமான அடிப்படையிலான ‘கிரீமிலேயர்’ நடைமுறை பொருந்தாது என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நலத்திட்டங்களில் ஏற்கெனவே வருமானத் தகுதி இருப்பதால், உண்மையான பயனாளிகளுக்கே பலன் கிடைக்கிறது என்றும் விளக்கமளித்துள்ளது.
* எதிர்க்கட்சிகளின் கருத்தை அமித் ஷாவிடம் தெரிவிக்க ரிஜிஜுவுக்கு அறிவுரை: நாடாளுமன்றத் தில் ஏற்பட்ட அமளியின் போது, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகளின் உணர்வுகளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்துரைக்குமாறு அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு அறிவுறுத்தினார். இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டன.
தி டெலிகிராப்:
* யுபிஅய் பரிவர்த்தனை கட்டண மசோதாவுக்கு எதிர்ப்பு. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஅய் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் மசோதாவை காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்துள்ளன. இது பொது மக்களுக்கு கூடுதல் சுமையையும், இலவச டிஜிட்டல் பரிவர்த்தனை முறையையும் பாதிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘மாணவர்களின் குரலை ஒவ்வொரு அரசும் கேட்க வேண்டும்’ – ராகுல் காந்தி. ஜார்கண்ட் மாணவர் போராட்டங்கள் குறித்து முதல் முறையாக பேசிய ராகுல் காந்தி, மாணவர்களின் கோரிக்கைகளை அரசுகள் கவனித்து, கல்வி அமைப்பில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
– குடந்தை கருணா
