முத்தமிழறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவிடம் நோக்கி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணி நிறைவில் கலைஞரின் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பேரணியில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. இராசா, தயாநிதிமாறன், மேனாள் அமைச்சர் க. பொன்முடி, ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். (சென்னை, 7.8.2026)
