திராவிடர் கழக இளைஞரணியினர் போராட்டம் – கைது!

2 Min Read

நீட் தேர்வினால் கோவை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டும் –
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும்
திருவாரூரில் திராவிட மாணவர் கழகத்தினர்,

திருவாரூர், ஜூன் 18 கோவையில் நீட் தேர்வு அச்சத்தால் நேற்று (17.6.2026) தற்கொலை செய்து கொண்ட கோவை புதூர் மாணவி அனு கீர்த்தனா (வயது 19)வின் இறப்பிற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் திருவாரூரில் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் இரயில் நிலையத்தினை முற்றுகையிடச் சென்ற தோழர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையிலேயே அமர்ந்து நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்; ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; அனிதா முதல் கோவை மாணவி கீர்த்தனா வரையிலான மாணவர்களின் இறப்பிற்கு நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், இணைச் செயலாளர் மு. இளமாறன், துணை செயலாளர் தேவ.நர்மதா, மாநில இளைஞரணி செயலாளர் உமாநாத், மாவட்ட இளைஞரணி தலைவர் ரவிகுமார், திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் அறிவுச் சுடர், திராவிட மாணவர் கழக இதழ்மொழி, இளைஞரணி செயலாளர் தமிழவன், மன்னார்குடி மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் அழகேசன், இளைஞரணி தோழர் மனோஜ், திருத்துறைபூண்டி நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் மோகன், திருவாரூர் நகர துணை தலைவர் சுரேஷ், திராவிடர் கழகத் தோழர் சுரேசன், மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் வீரையன், கோவை மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன் ஆகியோர் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 20–க்கும் மேற்பட்டத் தோழர்கள் கைது செய்யப்பட்டு திருவாரூர் அழகிரி நகர் எதிரில் உள்ள  யூ.பி. மகாலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட 2013 ஆம் ஆண்டு முதலே அத்தேர்வை ரத்து செய்யக்கோரி, திராவிட மாணவர் கழகம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. 2017 ஆம் ஆண்டு அரியலூர் மாணவி அனிதா மறைவையொட்டி, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடத்தி திராவிட மாணவர் கழகத் தோழர்கள் கைதாயினர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டும், மாணவர்கள், இளைஞர்கள் இரு சக்கர வாகனப் பரப்புரையில் ஈடுபட்டும், பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியும் வருகின்றனர். நீட் எதிர்ப்புக் களத்தில் தமிழ்நாட்டில் அனைத்து இயக்கங்களும் ஓரணியில் நின்று எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *