புதுடில்லி, ஆக 7 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 23 நாடு களுக்கு பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்ட அரசு முறைப் பயணங்களுக்கு ரூ.187 கோடி செலவிடப்பட்டதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்தது.
2021 முதல் பிரதமா் மோடி மேற் கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து கேள்வியெழுப் பப்பட்டது. இதற்கு மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணைய மைச்சா் பபித்ர மாா்கெரிட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2025-ஆம் ஆண்டில் 23 நாடுகளுக்கு பிரதமா் மேற்கொண்ட அரசுமுறைப் பய ணங்களுக்கு ரூ.187 கோடி செல விடப்பட்டுள்ளது.
அமெரிக்கா பயணத்துக்கு ரூ.16.54 கோடி, பிரான்ஸ் ரூ.25.59 கோடி, சவூதி அரேபியா ரூ.15.54 கோடி, பிரேசில் ரூ.17.72 கோடி, சீனா ரூ.10.59 கோடி மற்றும் பிரிட்டன் ரூ.9.91 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதுதவிர மோரீஷஸ், தாய்லாந்து, இலங்கை, சைப்ரஸ், கனடா, குரோஷியா, கானா, டிரினிடாட்-டொபேகோ, ஆா்ஜென்டீனா, நமீபியா, மாலத்தீவு, ஜப்பான், பூடான், தென் ஆப்பிரிக்கா, ஜோா்டான், ஓமன் மற்றும் எத்தி யோப்பியா ஆகிய நாடுகளுக்கு பிரதமா் பயணித்துள்ளாா்.
4 ஆண்டுகளில் ரூ.295 கோடி செலவு: 2021-இல் ரூ.36 கோடி, 2022-இல் ரூ.55.82 கோடி, 2023-இல் ரூ.93 கோடி, 2024-இல் ரூ.109 கோடி என ஒட்டுமொத்தமாக கடந்த 2021-இல் இருந்து 2024 வரை பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.295 கோடி செலவிடப்பட்டது.
316 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: கடந்த 2021 ஜூலை முதல் பிரதமா் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களில் ஒட்டுமொத்தமாக 316 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. 2021 ஏப்ரல் முதல் 2025 டிசம்பா் வரை ரூ.36.5 லட்சம் கோடி (381.8 பில்லியன் டாலா்) அந்நிய நேரடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 35 பக்கங்கள் கொண்ட இந்த பதிலில் 2021 முதல் 2026 வரை பிரதமா் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் கையொப்பமிடப்பட்ட புரிந் துணா்வு ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
