ஜாதியை ஒழிக்கும் வழி ‘நூல் திறனாய்வு’

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பாப்பிரெட்டிப்பட்டி, ஆக. 6- அரூர் மாவட்ட கழக பாப்பிரெட்டிப் பட்டியில் விடுதலை வாசகர் வட்டம் – தமிழ் மாணவர் மன்றம் மற்றும் பகுத்தறிவு கலைத்துறை சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய ‘ஜாதியை ஒழிக்க வழி’ நூலை தந்தை பெரியார் வெளியிட்டு 90ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வு பாப்பிரெட்டிப்பட்டி முரு கர் மலை அடிவாரத்தில் 27.7.2026 அன்று நடை பெற்றது.

இந் நிகழ்வில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார்.  மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செய லாளர் மாரி. கருணாநிதி மற்றும் தோழர் கவுதமன் தொடக்கவுரையாற்றினார்.

தலித் முரசு இதழின் ஆசிரியர் தோழர் புனித பாண்டியன் நூலைப் பற்றிய ஆய்வுரையும், மாணவர்களுக்கான கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார்.

இந்நிகழ்வில் தமிழ் மாணவர் மன்ற இளைஞர் மற்றும் திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் 85-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப் பித்தனர்.

நிகழ்வு சிறப்பாக நடக்க முழு ஒத்துழைப்புவுடன் செயல்பட்ட திமுக மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர்  தோழர் சுர்ஜித் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வை தோழர் த.மு.யாழ் திலீபன் ஒருங்கிணைத்தார். பகுத்தறி வாளர் கழகத் தோழர் இ. சமரசம் இணைப்புரை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *