அணி அணியாகத் திரளுகிறார்கள்! கருநாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து
மே-31 திருவாரூர் ரயில் நிலையம் முன்பு திராவிடர் கழகம் சார்பில்

27-05-2026 அன்று நாகை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று கழகத் தோழர்களை சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு
திருமருகல் ஒன்றியம்: புத்தகரம், திருமருகல்,மருங்கூர் கொட்டாரக்குடி
கீழ்வேளூர் ஒன்றியம்: ஒக்கூர், கடம்பங்குடி, கீழ்வேளூர், குருக்கத்தி,செருநல்லூர்
மேற்கண்ட கிராமங்களுக்கு சென்று திராவிடர் கழகத்தோழர்கள் மற்றும் தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள், பொதுமக்களைச் சந்தித்து, பெருந்திரளாகப் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றி அடையச்செய்ய அழைப்பு கொடுக்கப்பட்டது.
மகிழ்வுடன் வரவேற்று “93 வயதில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உறுதியாக பெருந்திரளான மக்களுடன் பங்கேற்போம்” என உறுதி அளித்தனர்.
போராட்ட அழைப்பிற்கான பயணத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், விவசாய தொழிலாளரணி மாநிலச் செயலாளர் வீ.மோகன், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், நாகை மாவட்டச் செயலாளர் ஜெ.பூபேஸ்குப்தா, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி ஆகியோர் இச்சுற்றுப்பயணத்தில் பங்கேற்றனர்.
