‘நீட்’ தேவையில்லை: பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை! ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு நிதி அமைச்சர் வலியுறுத்தல்

1 Min Read

சென்னை, ஆக.6- நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் போராட்டம் நடந்த நேரத்தில் த.வெ.க. அரசு எந்த ஒரு நிலைப்பாட்டையும் தெரிவிக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அதற்கு பதில் தரும் வகையில் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்போது நிதி அமைச்சர் அதுதொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாடு நீட் தேர்வினை கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வில் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு ஆகியவை எதிர்காலத் தலைமுறையினரின் உயர்கல்வி வாய்ப்பினை பெரிதும் பாதிக்கின்றன. எனவே நீட் தேர்வு முறையினை உடனடியாக ரத்து செய்து முந்தைய முறையான பிளஸ்-2 பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க் கையை தொடர்ந்து ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *