சட்டமன்றச் செய்திகள் 2026-2027ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை வெளியீடு

2 Min Read

சென்னை, அக். 6- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்  இன்று (6.8.2026) காலை 10 மணியளவில் 2026-2027ஆம் ஆண்டுக்கான வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் அவர்கள் உரையாற்றினார்.

அதில் அவர் அறிவித்தவை வருமாறு:-

உற்பத்தி இலக்கு
& மண்வளப் பாதுகாப்பு:

2026-2027 ஆம் நிதியாண்டில் 131 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்வளப் பாதுகாப்பு இயக்கம்: ரூ.122.51 கோடி நிதி ஒதுக்கீட்டில் “தமிழ்நாடு மண்வளம் பாதுகாப்பு இயக்கம்” அறிமுகம் செய்யப்படும்.

உழவர் அடையாள அட்டை வைத்துள்ள 3 லட்சம் விவசாயி களுக்கு ரூ.6 கோடி செலவில் மண்வள அட்டைகள் வழங்கப்படும்.

புதிய இயற்கை வேளாண் தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரம்
& நவீனத் தொழில்நுட்பம்:

விவசாயிகளுக்கான மும்முனை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

உழவர் செய்யறிவு திட்டம் (AI): விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பயிர் பெருக்கம்
& சிறப்பு இயக்கங்கள்:

பயறு மற்றும் எண்ணெய் வித்துக் கள்: தன்னிறைவு இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி ஒதுக்கீடு.

மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்க ரூ.36 கோடி, பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்கு ரூ.27 கோடி.

சாமை, திணை, வரகு உள்ளிட்ட தானியங்களை ஊக்குவிக்க ரூ.7.61 கோடி.

கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.9 கோடி மற்றும் விதைக்கரும்பு மானியத்திற்கு ரூ.9.36 கோடி.

தென்னை சிறப்புத் திட்டத்திற்கு ரூ.41 கோடி; பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம் மற்றும் பயிற்சிகளுக்கு ரூ.2 கோடி.

நெல் விதை உற்பத்தி மானியத் திற்கு ரூ.34.72 கோடி மற்றும் 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.7.1 கோடி ஒதுக்கீடு.

சமூக நலன்
& சிறப்பு நிதியுதவிகள்:

ஆதிதிராவிடர் & பழங்குடியின விவசாயிகள் சிறப்புத் திட்டம்:

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களுக்கு 20% வரை கூடுதல் மானியம்.

சோலார் மோட்டார் பாம்ப் செட்டுகள் மற்றும் 300 ஆழ்துளை/குழாய் கிணறுகளுக்கு 100% மானியம் வழங்க ரூ.56.72 கோடி ஒதுக்கீடு.

காட்டுப்பன்றி சேத தடுப்பு: பயிர் இழப்புகளைத் தடுக்க ரூ.7.35 கோடி.

சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது (5 பேருக்கு – ரூ.11 லட்சம் நிதி) மற்றும் விவசாயிகளுக்கு அஞ்சலை அம்மாள் பெயரில் விருதுகள் வழங்கப்படும்.

தோட்டக்கலை
& ‘வெற்றி இல்லத்தரசி’ திட்டம்:

வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்: மாடித்தோட்டம், இடுபொருள் தொகுப்புகள், செங்குத்துத் தோட்டம் மற்றும் நிழல்வலைக் குடில்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்கு (சாமந்தி சாகுபடிக்கு ஒளியூட்டுதல், பசுமைக் குடில், வாழை முட்டு கொடுத்தல் போன்றவை) ரூ.41 கோடி.

கீரை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.20 கோடி.

உலகளாவிய ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.8.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், எல் நினோவால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களின் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தனது உரையில் உறுதியளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *