இளம் வயதில் பேராசிரியராகி 306 ஆண்டு சாதனையை முறியடித்த 18 வயது அமெரிக்க இளைஞர்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

வாசிங்டன், ஆக. 6- அமெரிக்காவை சேர்ந்த நாதன் தாமஸ் 18 வயதில் உலகின் மிக இளவயது ஆண் பேராசிரியர் என்ற 306 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார். பொதுவாக 18 வயதில் அனைவரும் கல்லூரியில் படித்து கொண்டிருப்பார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் 18 வயதிலேயே பேராசிரியர் ஆகி சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த நாதன் தாமஸ் என்பவர் தனது 10 வயதிலே மியாமி டேட் கல்லூரியில் இரட்டைப் பட்டப்படிப்பைத் தொடங்கினார். பின்னர் தனது 14ஆவது வயதில் புளோரிடா பன்னாட்டு பல்கலைக்கழகத்திற்கு மாறிய அவர், 4 ஆண்டுகளில், மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை வெற்றிகரமாகப் பெற்று, சிறப்புத் தகுதியுடன் பட்டம் பெற்றார்.

சான்றளிக்கப்பட்ட கல்வியாளர் என்ற முறையில், நாதன் தாமஸ் மாணவர்களுக்குச் சிக்கலான கணினி மற்றும் நிரலாக்கக் கோட்பாடுகளைக் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நாதன் தாமஸ் தனது 18 வயது மற்றும் 346 நாட்களில் மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் கற்பிக்கத் தொடங்கியதன் மூலம், உலகின் மிக இளவயது ஆண் பேராசிரியர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக Colin Maclaurin என்பவர் 19 வயதில் பேராசிரியர் ஆகி, 306 ஆண்டுகளாக இந்த பட்டத்தை தக்க வைத்திருந்தார். இதே போல், ஆலியா சபூர் என்பவர் 2008 ஆம் ஆண்டு தனது 18 வயது 362 நாட்களில் பேராசிரியராகி, உலகின் மிக இளம் வயது பெண் பேராசிரியர் என்ற தற்போதைய சாதனையை வைத்துள்ளார். ஆலியா சபூரை விட நாதன் தாமஸ் 16 நாட்கள் இளையவர் ஆவார்.

“இப்போது, கற்பித்தலில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி என்னவென்றால், ஒரு மாணவருக்கு ஒரு விசயம் புரிவதைப் பார்ப்பதுதான். ஒரு சிக்கலை நீங்களே தீர்ப்பதைக் காட்டிலும் இது ஒரு வித்தியாசமான திருப்தி.

ஒரு விசயத்தைக் கற்பிப்பது, அதை முற்றிலும் வேறு ஒரு மட்டத்தில் புரிந்துகொள்ள உங்களைத் தூண்டுகிறது. அதனால், மாணவர்கள் கற்றுக்கொள்வதைப் போலவே, ஒருவேளை அவர்களை விட அதிகமாகவே நானும் அதிலிருந்து கற்றுக்கொள்கிறேன்” என்று தாமஸ் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *