‘நீட்’ தேர்வு விடைத் தாள்களில் முரண்பாடுகள்! உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 6- நீட் தேர்வு அசல் ஓஎம்ஆர் தாளில் குறிப்பிடப் பட்டிருந்த பதில்களுக்கும், தேசிய தேர்வு முகமையால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓஎம்ஆர் தாள்களில் உள்ள பதில் களுக்கும் இடையே முரண் பாடுகள் இருப்பதாகக்கூறி, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வுகாண தேசிய தேர்வுகள் முகமையை பலமுறை அணுகியும் எந்த நிவாரணமும் கிடைக்க வில்லை, நேரடியாக தேசிய தேர்வுகள் முகமை அலுவலகத்துக்கு சென்ற போதும் நிவாரணம் கிடைக்கவில்லை’ என, மனுவில் மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன்பு நேற்று முன்தினம் (4.8.2026) முறையிடப்பட்டது.

நீட் கலந்தாய்வு செயல் முறை ஏற்கெனவே நடைபெற்று வருவதால் வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கோரி்னர்.

அ்தை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, மனுவை விசாரணைக்குப் பட்டிய லிடுவதாக உறுதியளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *