சூடான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் உயிரிழப்பு

1 Min Read

கார்டூமின், ஆக. 4- வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு  சூடான். அந்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவத் தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவுப் படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவத் தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவுப் படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

மோதல்

இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவம் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமினை கடந்த மார்ச் மாதம் ராணுவம் கைப்பற்றியது. அதேவேளை, ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

பொதுமக்கள்  உயிரிழப்பு

இந்நிலையில், சூடானின் வடக்கு டர்பர் மாகாணம் ஹர அல் சவியா கிராமம் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமத்தில் 3.8.2026 அன்று மதியம் கிராம பஞ்சாயத்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *