கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகலைத் தொடர்ந்து பிரிட்டன் புதிய பிரதமராக ஆன்டி புர்ன்ஹாம் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார்

லண்டன், ஜூலை 18 பிரிட்டன் அரசியலில் நிலவி வரும் தொடர் பரபரப்புகளுக்கு இடையே, அந்நாட் டின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் ஆன்டி புர்ன்ஹாம் வரும் 20.7.2026 அன்று பதவியேற்க உள்ளார். முன்னதாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந் தெடுப்பதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

ஆன்டி புர்ன்ஹாம்

இதில், கட்சியின் மூத்த தலைவரான ஆன்டி புர்ன்ஹாம் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. பிரிட்டன் அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட ஆன்டி புர்ன்ஹாம், இதற்கு முன்பு கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியின் மேயராகப் பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆன்டி புர்ன்ஹாம் பேசியதாவது: “பிரிட்டனின் பொருளாதார வளர்ச் சியை மீட்டெடுப்பது, பொதுச் சேவைகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் மாநிலங்களுக்கு இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்வதே எனது முதன்மையான நோக்கம். இதற்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன்” என்றார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பிரதமர்கள் மாறி வரும் சூழலில், ஆன்டி புர்ன்ஹாமின் வருகை அந்நாட்டின் அரசியல் மற்றும் பொரு ளாதாரச் சூழலில் நிலைத் தன்மையைக் கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் எழுந்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *