கவிஞர் ஷெல்லியின் பிறந்தநாள் இன்று (4.8.1792)
சமூக நீதி, தனிமனித சுதந்திரம், மற்றும் அடக்கு முறைக்கு எதிரான புரட்சிகரக் கருத்துகளைத் தம் கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவர்.
ஆகஸ்ட் 4, 1792 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். இளமையிலேயே சுதந்திரமான சிந்தனைகளைக் கொண்டிருந்த இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது ‘நாத்திகத்தின் அவசியம்’ என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதியதற்காகப் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப் பட்டார். பின்னர் அதே வாசகம் பல்கலைக்கழகத்தின் வாசகமாக அங்கிகரிக்கப்பட்டு இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
பெர்சி பிஷ் ஷெல்லி (1792 – 1822) 19-ஆம் நூற்றாண் டின் தொடக்கத்தில் வாழ்ந்த முதன்மையான ஆங்கில ரொமாண்டிக் கவிஞர்களில் ஒருவர்.
அவரது புரட்சிகரக் கவிதை ‘Song to the Men of England’ என்ற கவிதையின் சிறுபகுதியின் தமிழாக்கம்
விதைத்தீர்கள் – அறுக்கவில்லை;
நெய்தீர்கள் – உடுக்கவில்லை;
உழைத்தீர்கள் – அனுபவிக்கவில்லை;
இனி வாளையும் கேடயத்தையும்;
உங்களுக்காக உருவாக்குங்கள்!
உயிர்கொண்ட உரிமைக் குரல்
வெளியெங்கும் சிதறட்டும்!
அடக்குமுறை சிம்மாசனங்கள்
அடிமைகளால் சிதையட்டும்!
கவிஞர் ஷெல்லியின் பிறந்தநாளில் (4.8.1792) அவரைப் போற்றுவோம்.
