பாராட்டத்தக்க இளைஞனின் செயல்பாடு! மரப்படகு மூலம் 2 ஆயிரம் பேரைக் காப்பாற்றிய இளைஞர்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திக்கோ, ஆக.3 அசாமில் கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கிய 2,000-க்கும் மேற் பட்டோரை மீட்ட இளை ஞரின் செயல் நெகிழ்ச் சியடைய வைத்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்த கன மழை வெள்ளத்தால் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி யுள்ளனர்.

அசாம் வெள்ளத்தில் 350-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டு 20,000-க்கும் அதிகமான ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தில் விலங் குகளும் கால்நடை களும் அடித்துச் செல்லப் பட்டதாலும், சாலைகள் மூடப்பட்டதாலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். .

இந்த அசாதாரண சூழலுக்கு மத்தியில் எந்தப் படகுமின்றி, பயிற்சியுமின்றி 25 வயதான இளைஞர் ஒருவர் தனது கிராம மக்கள் 2,000-க்கும் மேற்பட்டோரை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜூலை 19 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு, 25 வயதான ஸ்ரவன் குமார், தனது வீட்டில் சமையல் எரிவாயு உருளை வசதி இல்லாத நிலையில், ஆற்றங்கரையில் அடித்துவரும் விறகுகளைப் பொறுக்குவதற்காக பிஹுபோரில் உள்ள திக்கோ ஆற்றங்கரைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது வழக்கத்துக்கு மாறான காட்சிகள் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

ஆற்றில் வழக்கமான நீர்வரத்துக்கு பதிலாக கடுமையான அளவில் நீர்மட்டம் உயர்ந்து அவர்களது வீட்டையும் கிராமத்தையும் வெள்ள நீர் மூழ்கடிக்கத் தொடங்கியது.

10-ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டவரான ஸ்ரவன் குமார், துலுங்கா நோவா என்றழைப்படும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட விறகு, மரக்கடைகளால் உருவாக் கப்பட்ட கட்டுமரம் போன்ற படகைப் பயன் படுத்தி வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கத் தொடங்கியுள்ளார். குழந்தைகளையும் முதி யோர்களையும், கூரைகளில் சிக்கிவர்களையும்,  மருத்துவப் பயனாளிகளையும், கர்ப்பிணி களையும் தனது படகில் மீட்டுள்ளார் ஸ்ரவன்.

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியிருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் உள்பட அய்ந்து கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பேரை தானும், தன்னு டைய குழுவினரும் காப் பாற்றியதாகக் கூறுகிறார் ஸ்ரவன்.

சுமார் இரண்டு வாரங்கள் கடந்த நிலை யில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஸ்ரவனின் செயல் தற் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

படிப்பைப் பாதியில் விட்டு போதிய பயிற்சி எதுவுமின்றியும், இரவு முழுவதும் மழை வெள்ளம் எனப் பாராமல், பொதுமக்கள் பலரின் உயிரையும் காப்பாற்றிய ஸ்ரவன் மற்றும் அவரது குழுவினரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *