சண்டிகர், ஆக. 2- பன் னாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு அணிகளின் பாரம்பரிய அடையாளமாக இருந்து வந்த நீல நிறத்திற்குப் பதிலாக, இந்திய தேசிய ஹாக்கி அணியின் சீருடையில் காவி நிறம் அறிமுகப்படுத் தப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பன்னாட்டு எப்அய்எச் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஆண் கள் மற்றும் பெண்கள் தேசிய அணிகளுக்கான புதிய சீருடைகளை ஹாக்கி இந்தியா அண்மையில் வெளியிட்டது. இதில் வழக்கமான நீல நிறத்திற் குப் பதிலாக காவி நிறம் பிரதானமாக இடம்பெற் றுள்ளது. இந்த நிற மாற்றம் அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் விவாதங்களைக் கிளப்பி யுள்ளது.
ஹாக்கி வீரர்களின் சீருடை மாற்றம் குறித்து காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் பிரி யங்கா காந்தி வத்ரா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். செய்தியா ளர்களிடம் பேசிய அவர்:
“ஆடை நெறிமுறைகள் மற்றும் கல்விக் கொள்கைகள் மூலம் வரலாற்றை மீண்டும் எழுத முயல்கிறார்கள். ஆனால் நமது இளைய தலைமுறையின் எண்ணம் என்னவென்பது அண்மையில் ஜந்தர் மந்தர் சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது. தற்போது ஹாக்கியிலும் இந்த மாற்றத்தைச் செய்துள்ளவர்கள், நாளை ராணுவத்திலும் இதைச் செய்யக்கூடும். இவர்களை எப்படி நம்புவது? அவர் களுக்கு அனைத்து இடங்களிலும் காவி நிறமே தேவையாக இருக்கிறது,” என்று விமர்சித்துள்ளார்.
ஏற்கெனவே ரயில் கள் மற்றும் பீகார் மாநில பள்ளிகளுக்கு காவி நிறம் பூசப்பட்ட விவகா ரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், விளையாட்டுத் துறையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் விமர்சனங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
