நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்ந்தது நூற்பாலைகள் அறிவிப்பு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திருப்பூர், ஆக.2 நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதனால், தொழில் துறையினர் அதிர்ச்சி யடைந்துள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள் ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி செய் யப்பட்டு உள்நாட்டு வர்த்தகம் நடந்து வருகிறது. இதுபோல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆடை தயாரிப்புக்கு முக்கிய பங்காற் றுவது பருத்தி நூல் ஆகும்.

பருத்தி விலையை பொறுத்து நூல் நிலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். கடந்த டிசம்பர் மாதத்துடன் பருத்தி இறக்குமதி வரி விலக்கு நிறைவடைந்ததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, உள்நாட்டு பருத்தியும் கேண்டி ரூ.4000-ரூ.5,500 வரை விலை உயர்ந்தது. இதனால், கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை மாதந்தோறும் சிறுக சிறுக சுமார் 61 ரூபாய் வரை நூல் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஒன்றிய அரசு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதன் காரணமாக, நூல் விலை குறையும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாதத்திற்கான (ஆகஸ்ட்) நூல் விலையை நூற்பாலைகள் நேற்று அறிவித்தன. அதில் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்துறையினர் கூறுகையில்,“நூல் விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. நூல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் ஆர்டர்கள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. எனவே, நூல் விலையை குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *