சென்னை, ஆக.2 மாமல்லபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு அழைத்து வரப்பட்ட, நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற் றோர்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி நேற்று (1.8.2026) வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளையை இழந்து துயருறுவதைப் பார்ப்பதை விட வேதனையானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட சீர்கேடுகள், மாணவர்களின் பல ஆண்டுகால கடின உழைப்பை ஒரே இரவில் பாழாக்கி விட்டது.
பிரதமருக்கு கண்டனம்
இதுபோன்ற சூழலில், பிரதமரோ மாணவர்களை “மன்னிப்பது” பற்றிப் பேசு வதற்கு துணிச்சலைக் கொண்டிருக்கிறார். அவரது இந்த பேச்சு முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
பாதிக்கப்பட்ட துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் நேரில் சென்று சந்தித்ததில்லை. இந்திய மாணவர்களுக்கு பிரதமரின் ‘மன்னிப்பு வழங்கும் போக்கு’ தேவையில்லை; மாறாக, சீர்கேடுகளுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மாணவர்களிடம் மனப்பூர்வ மாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
