சென்னை, ஆக.24 தமிழ்நாட்டில் வீட்டு சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளர்களின் உண்மை சரிபார்ப்புப் பணி (இ-கேஒய்சி) ஆக.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்கின்றன. எரிவாயு உருளையை வாங்கிய பின்னா், வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கில் ஒன்றிய அரசின் மானியத் தொகை செலுத்தப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு உள்பட நாடு முழுதும் சமையல் எரிவாயு உருளை பயனாளிகளின் உண்மை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களின் உண்மை சரிபார்ப்பு (இ-கேஒய்சி) சான்று அளிக்க 31.8.2026ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
