சென்னை, ஆகஸ்ட் 1– திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட விதிக்கப்பட்ட தடையை ஆக.24 வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்ற நிலை யில், திருச்சி கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்.
இதேபோல அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பி்ன்னர் தவெகவில் இணைந்த விராலி மலை சி.விஜய பாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினர்
தேர்தல் வழக்கு
இந்த 5 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து ஏற்கெனவே தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடக்கூடாது என தடை கோரி, பாளையங் கோட் டையைச் சேர்ந்த வழக்குரைஞர் வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு, இந்த 5 தொகுதி களுக்கும் இடைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தும், சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கவும் ஏற்கெனவே உத்தர விட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதி காரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (31.7.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆக.24-க்கு தள்ளிவைப்பு
அதையடுத்து நீதிபதிகள், ஏற்கெனவே இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளி யிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நீட்டித்து விசாரணையை அன்றைய நாளுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி, ஆகஸ்ட் 1 தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கருநாடக மாநில எல்லையான பிலிகுண்டலு வழியாக ஒகேனக்கல்லுக்கு 30.7.2026 அன்று வினாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (31.7.2026) 500 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றின் நீர்மட்டம் சற்று உயர்ந் துள்ளது. நீர்வரத்து நிலவரத்தை ஒன்றிய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டலு பகுதியில் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
