“மோடி-அமித்ஷா இந்தியாவின் கடந்த காலம்; எதிர்கால சந்ததியை மிரட்ட வேண்டாம்”
ராகுல் காந்தி எக்ஸ் பதிவில் கடும் விமர்சனம்
புதுடில்லி, ஆகஸ்ட் 1 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஜென் ஸி இளைய தலைமுறையினரை மிரட்டி அடக்க முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளார். “முதலில் எலும்புகளை உடைத்தீர்கள், இப்போது வழக்குகளும் சமூக ஊடக கணக்கு முடக்குதலும் நடக்கிறது” என்று கூறிய அவர், “நீங்கள் இருவருமே இந்தியாவின் கடந்த காலம்; எதிர்காலத்தை கையாளும் விதத்தில் கவனமாக இருக்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
