ஜெய்ப்பூர், ஆகஸ்ட் 1 ராஜஸ்தானில் தனது வீட்டில் உள்ள ஒருசில எலுமிச்சை மரங்களைக் காட்டி, ஒன்றிய அரசின் தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சம் மானியம் பெற்றுள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் செயல் பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப் பினராக இருப்பவர் லும்பாராம் சவுத்ரி. இவர் சிரோஹி மாவட்டம் வடேலி கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டு நிலத்தில் உள்ள எலுமிச்சை மரங்கள் மற்றும் மேலும் சில மரங்களைச் சாகுபடி செய்வதற்காக, ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தோட்டக்கலை வாரியத் திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சத்தை மானியமாகப் பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானியங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள் விக்கு, ஒன்றிய அரசு அளித்த அதி காரப்பூர்வ பதிலில் இந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஏற்ெகனவே ஒன்றிய அமைச்சராக இருக்கும் பகீரத் சவுத்ரி என்பவர் தனது சொந்த வெள்ளரிப் பண்ணைக்காக ரூ.99 லட்சம் மானியம் பெற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மற்றொரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான லும்பாராம் சவுத்ரியும் இவ்வாறு மானியம் பெற்றுள்ளது பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
