மகாராட்டிரா அரசியலில் பரபரப்பு ராமன் கோயிலில் திருடப்பட்ட பணத்தின் மூலம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறார்கள் உத்தவ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டு

1 Min Read

மும்பை, ஜூலை 4 மகா ராட்டிராவில் அரசியல் கட்சி களை உடைப்பதற்காக, ராமன் கோயில் நிதியில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு பயன்படுத் தப்படுவதாக சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே கடுமை யான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

அரசியல் குதிரை பேரம்

மாற்றுக்கட்சி நாடாளுமன்ற மற்றம் சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கி, கட்சிகளை உடைக்கும் செயலை ‘ஆபரேஷன்’ என்று அழைக்கிறார்கள். அப்படி யென்றால், பாஜக தற்போது நடத் துவது ‘ஆபரேஷன் ராம் மந்திர்’ தானா?  அயோத்தி ராமன் கோயிலுக்காகத் திரட்டப்பட்ட நிதியில் பெரும் முறைகேடுகளும், திருட்டும் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.

ராமன் கோயிலில் இருந்து திருடப்பட்ட அந்தப் பணத்தை வைத்துதான், தற்போதைய அரசியல் கட்சிகள் உடைக்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

“கோயில்களில் கொள்ளையடிப்ப வர்களை இந்துக்கள் இனி ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் இ வ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்

பாஜகவின் அரசியல் நகர்வுகளை ராமன் கோயில் நிதியோடு ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே பேசியுள்ள இந்த விமர்சனம், தற்போது மகாராட்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *