கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.7.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மேகதாது அணை விவகாரமாக கருநாடக முதலமைச்சர் சிவகுமாரை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பயணம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கடும் எதிர்ப்பு.

* சிஜேபி போராட்டக்காரர்கள் மீது டில்லி காவல்துறை நடவடிக்கை எடுக்காது: மாநில அரசு உத்தரவு.

* நாடாளுமன்றத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வராதது, அவரது குற்றமுள்ள நெஞ்சே காரணம், ராகுல் காட்டம்.

* இந்திய ஹாக்கி வீரர்களின் உடையில் காவி நிறம் திணிப்பு, எதிர்க்கட்சிகள் கண்டனம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* வந்தே மாதரம் கட்டாய மசோதா நிறைவேற்றம்; கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என திமுக கனிமொழி எம்.பி. எதிர்ப்பு.

* வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது: வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘சங் பரிவாரின் செயல்திட்டம்’ என்று விமர்சித்த நிலையில், தற்போது பள்ளிகளில் ‘பிஎம் சிறீ’ (PM SHRI) திட்டத்தைச் செயல்படுத்த காங்கிரஸ் தலைமையிலான கேரளா அரசு ஒப்புதல்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அமைச்சரை ஆறு மாதங்களுக்கு மேலாக பதவியில் நீடிக்க வைப்பது எப்படி?: அமைச்சர் தீபக் பிரகாஷ் விவகாரத்தில் பீகார் அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

* உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் 151 சிறப்பு மருத்துவப் படிப்பு (SUPER-SPECIALITY) இடங்களைப் பாதுகாக்க தவறியதாகத் தமிழ்நாடு அரசு மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டு

தி இந்து:

* தணிக்கை அறிக்கைகளை அணுக ‘பிஎம் கேர்ஸ்’ (PM CARES) மறுப்பது குறித்து ஆர்வலர்கள் கேள்வி.: 2022-2023-க்குப் பிறகு தணிக்கை அறிக்கைகள் பொதுவெளியில் கிடைக்காதது “மிகவும் கவலைக்குரியது” என்று ‘மக்களின் தகவல் உரிமைக்கான தேசிய பிரச்சார’த்தின் (NATIONAL CAMPAIGN FOR PEOPLE’S RIGHT TO INFORMATION) இணை ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி பரத்வாஜ் கவலை.

* தலைமை நீதிபதி (CJI) இல்லாத தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) தேர்வுக் குழுவை ஒன்றிய அரசு நியாயப்படுத்துகிறது: பிரதமரின் மீதான ‘நம்பிக்கையின்மை’ பற்றியது அல்ல, மாறாக ‘நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அது வழங்கப்படுவது வெளிப்படையாகவும் தெரிய வேண்டும்’ என்பது பற்றியது என்று உச்ச நீதிமன்றம் பதிலடி.

தி டெலிகிராப்:

* மாணவர்கள் மீது வன்முறையை பயன்படுத்தும் உத்தரவு அமித்ஷாவிடம் இருந்து வந்ததாக சி.ஜே.பி.-யின் அபிஜீத் டிப்கே குற்றச்சாட்டு; அமித்ஷா பதவி விலக கோரிக்கை

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு இயங்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள்.!! ஒன்றிய கல்வி அமைச்சகம் அதிர்ச்சித் தகவல். இந்த பட்டியலில் 16,357 பள்ளிகளுடன் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *