கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.8.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை – தற்கொலைகள் அதிகரிப்பு:  நீட் தேர்வுக்குத் தயாராகியும் மருத்துவ இடம் கிடைக்காததால் இளம் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்கின்றன; தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. பாளையங்கோட்டை மாணவி சுருதிலயா, மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டெக்கான் கிரானிக்கல்,  அய்தராபாத்:

* இளைஞர்களின் போராட்டம் – நிறுவனங்களின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. கல்வி, வேலை வாய்ப்பு, நீட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் இளைஞர்கள் வீதிகளில் போராடுவது, நாட்டின் நிறுவன அமைப்புகளின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என மூத்த வழக்குரைஞர் மேனகா குருசுவாமி தெரிவித்துள்ளார்.

* பாஜக – ஆர்.எஸ்.எஸ். மீது எப்.அய்.ஆர். கோரிக்கை: உத்தரகாண்டில் கார்கேவுக்கு எதிராக பாஜக–ஆர்எஸ்எஸ் நடத்திய ‘சுத்திகரிப்பு’ நிகழ்ச்சிக்கு எதிராக ராகுல் காந்தி கடுமையாக கண்டனம் தெரிவித்து, இது அரசியலமைப்புக்கு எதிரான நடைமுறை என குற்றச்சாட்டு.  மல்லிகார்ஜுன கார்கேவிற்கு நீதி கிடைக்க, பிரதமர் மோடி உடனடியாக குற்றப்பத்திரிகை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தி இந்து:

*   “ஜென்-சி இளைஞர்களின் அண்மையில் போராட்டங்கள், இந்தியாவில் ஜனநாயகம் அழிய ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்ற நம்பிக்கையை அளிக்கின்றன. நாட்டின் எதிர் காலத்தை பாதுகாக்க மக்கள் அரசியலமைப்பை நாடி, அதை காப்பாற்றுவார்கள்” என மேனாள் ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் தெரிவித்தார்.

தி டெலிகிராப்:

*  இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக கூட்டணிக்குள் மோதல்: எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினருக்குள் உள் ஒதுக்கீடு செய்து, மிகவும் பின்தங்கியோருக்கும் இடஒதுக்கீட்டுப் பலன் சென்றடைய வேண்டும் என்ற விவகாரத்தில் சிராக் பாஸ்வான்–ஜிதன் ராம் மாஞ்சி இடையே பகிரங்க மோதல் ஏற்பட்டது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு வழி வகுக்கவில்லை; ‘கிரீமிலேயர்’ கோருபவர்கள் முதலில் இடஒதுக்கீட்டுப் பலனைத் துறக்க வேண்டும் என சிராக் பாஸ்வான் விமர்சனம்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *