நியூசிலாந்தை ஒளிரச் செய்த விண்கற்கள் அதிவேக ஒளியுடன் வெடித்த நிகழ்வு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

வெலிங்டன், ஜூலை 30– நியூசிலாந்து முழுவதும் இரவு வானில் அடுத்தடுத்து இரண்டு பேருரு விண்கற்கள் கண்கவர் ஒளியுடன் வலம் வந்தன. இவற்றுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் மக்களை மிரளச் செய்துள்ளன.

தெற்கு தீவுப் பகுதிக்கு மேல் பெரிய விண்கல் ஒன்று சென்றதைத் தொடர்ந்து, வடக்கு தீவுப் பகுதிக்கு மேலே இரண்டாவது ஒளிரும் விண்கல் வானைக் கிழித்துச் சென்றது என கூறப்படுகிறது.

இந்த நிகழ்வின்போது கார்களின் கேமராக்களில் வானம் வெள்ளை, ஆரஞ்சு மற்றும் ஊதா நிறப் பிரகாசத்தால் ஜொலித்தது பதிவாகியுள்ளது.

மக்களின் அதிர்ச்சி அனுபவமாக, விண்கல் கிழக்கிலிருந்து மேற்காகச் சென்று இரவு வானை வெளிச்சமாக்கியதுடன், கடந்து சென்ற பின்பும் அதன் தடயம் ஒரு நிமிடத்திற்கும் மேலாக வானில் தெரிந்தது எனவும், விண்கல் ஆரஞ்சு நிறப் பந்து போல் எரிந்து கொண்டிருந்தது என்றும் அதிலிருந்து கரும்புகை வெளியேறுவதையும் எங்களால் பார்க்க முடிந்தது எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வு கண்களுக்கு விருந்தாக மட்டும் இல்லாமல், வளிமண்டலத்தில் சக்திவாய்ந்த ஒலி அலைகளை உருவாக்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகளும் வனவிலங்கு களும் அச்சமடைந்தன.

விண்கற்கள் அதிவேகத்தில் வினாடிக்கு பல 10 கி.மீ. வேகத்தில் பூமியின் வளிமண்ட லத்திற்குள் நுழையும் போது, அவற்றுக்கு முன்பாக உள்ள காற்று கடுமையாக அழுத்தப்படுகிறது.

இந்த விரைவான அழுத்தம் காரணமாக சுற்றியுள்ள காற்று அதிவேகமாக சூடாகி, கண்கவர் ஒளியையும் தரையில் உணரப்பட்ட அதிர்வலைகளையும் ஏற்படுத்துகிறது என்று வானியலாளர்கள் விளக்கு கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *