இதுதான் ரெட்டை எஞ்சின் ஆட்சியா? தேஜஸ்வி குற்றச்சாட்டு

இணையவழி கையெழுத்து இயக்கம்

பாட்னா, செப்.14- பீகாரில் தொடர் மழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சேதங்களுக்கு மாநில அரசு ஒன்றிய அரசுக் கூடுதல் நிவாரணம் கேட்டு வரும் நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி   நேற்று (13.9.2026) பாட்னாவில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஒன்றிய அரசு பீகாரைப் பாரபட்சமாக மாற்றாந்தாய் மனதுடன் நடத்துகிறது. பீகார் வெள்ளத்தை ‘தேசிய பேரிடர்’ என அறிவித்து, ரூ.5,000 கோடி உடனடி நிதிஉதவி வழங்க வேண்டும் என கடந்த 7-ஆம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். அதற்கு இன்று வரை பதில் கிடைக்க வில்லை. இரட்டை என்ஜின் அரசு என கூறிக் கொள்ளும் பீகார் அரசால் ஒன்றிய அரசின் உதவியைப் பெற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *