கன்னியாகுமரி எஸ். குமாரதாஸ் அவர்களின் இறுதி நிகழ்ச்சி!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

குமரி, ஜூலை 30– கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகத் தலைவர் எஸ்.குமாரதாஸ் (வயது 67) மறைவுற்றார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி 28.7.2026 அன்று கன்னியாகுமரியை அடுத்த மந்தாரம் புதூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

குமரி மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் அவரது உடலுக்கு கழகக் கொடியை போர்த்தியும், மாலை வைத்தும் வீர வணக்கத்தை செலுத்தினர்.

குமாரதாசின் வாழ்விணையர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமாரதாஸ், மாவட்ட கழகக் காப்பாளர் ம.தயாளன், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.ராஜசேகர், மா.மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதானு, மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் எஸ்.அலெக்சாண்டர், சி.அய்சக் நியூட்டன், மாவட்ட இளைஞரணி செயலாளர்
இரா.இராஜேஷ் தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்சு, கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, மாவட்ட மகளிர் அணி தலைவர் சு.இந்திரா மணி, கழகத் தோழர்கள் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் வீரவணக்கக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி நகர் மன்ற தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் அன்னாரது உடலுக்கு மாலை அணிவித்தனர். தோழர் குமாரதாஸ் அவர்களுடைய இறுதி நிகழ்ச்சி எந்தவித சடங்குகளும் இல்லாமல் உடல் ஊர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

நாகர்கோவில் புளியங்குடியில் உள்ள மின் மயானத்தில் எந்த விதமான சடங்குகளும் இல்லாமல் எரியூட்டப்பட்டது. அங்கு கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னு ராஜன், நாகர்கோவில் மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி, மாவட்ட துணை தலைவர் ச.நல்லபெருமாள், கழகத் தோழர்கள் பா.சு முத்து, வைரவன், மு.குமரிச் செல்வன் மற்றும் எஸ்.குமாரதாஸ் அவர்களுடைய குடும்பத்தினர் பங்கேற்று வீர வணக்கத்தினை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *