சென்னை, ஜூலை 29- தமிழ்நாடு சட்டப் பேரவையில் பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் மே 6ஆம் தேதியும் வெளியிடப் பட உள்ளது.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பது தொடர்பான திமுக உறுப்பினர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று (28.7.2026) நடைபெற்றது. இதற்கு எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், சட்டப் பேரவையில் ஆளும் கட்சியின் வியூகங்களை திறம்பட எதிர்கொள்வது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதுதவிர மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, உறுப்பினர்கள் குதிரை பேரம், காவல் மரணங்கள், மேகதாது அணை, கோயில் நிலங்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேரவையில் கேள்வியெழுப்பவும் திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்பின் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “சட்டப்பேரவையில் முழுமையான விவரங்கள் இல்லாமல் கேள்விகளை எழுப்பக்கூடாது. பேரவை யில் பேச வேண்டியதை தற்போதே தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் தொகுதிகள் மட்டுமின்றி அருகே உள்ள தொகுதிகளில் நிலவும் முக்கிய பிரச்சினை களையும் குறிப் பெடுத்து முன்வைக்க வேண்டும்.
மேலும், நேரலையில் ஒளிபரப்பப் படுவதால் கவனமாகச் செயல்பட வேண்டும்” என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
