5 ஆண்டு சட்டப் படிப்புகள் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை, மே 20- அய்ந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்புகளுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கம் நேற்று முன்தினம் (18.5.2026) தொடங்கியது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் 11 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்குகிறது.

அதன்படி, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அரசு சட்டக் கல்லூரி மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் பி.ஏ.எல்எல்.பி சட்ட படிப்பிற்கும், பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் பி.ஏ.எல்எல்.பி (ஹானர்ஸ்), பி.காம்.எல்எல்.பி (ஹானர்ஸ்), பிபிஏ.எல்எல்.பி (ஹானர்ஸ்) மற்றும் பிசிஏ.எல்எல்.பி (ஹானர்ஸ்) ஆகிய 5 வருட சட்டப்படிப்புகளுக்கு 2026-2027ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியது.

விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். அனைத்து சட்டப்படிப்பு சேர்க்கைகளுக்கான செயல்பாடுகள் அதாவது விண்ணப்பங்கள் பெறுவது, தகுதிபெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வுகள் நடத்துவது மற்றும் சேர்க்கைக்கான ஆணைகள் வழங்குவது போன்ற அனைத்து செயல்முறைகளும் பல்கலைக்கழக இணையதளத்தின் (www.tndalu.ac.in) வாயிலாக மட்டுமே நடைபெறும்.

சீர்மிகு சட்டப்பள்ளியில் 624 இடங்களும், இணைவுபெற்ற சட்டக்கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 229 இடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *