‘நீட்’டிற்கு எதிராக வழிகாட்டும் திராவிடம்

2 Min Read

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு,

இந்து மனுதர்மத்தில் சூத்திரனுக்கு எதைக் கொடுத் தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதில் தொடங்கி, மருத்துவம் பயில சமஸ்கிருதம் தேவை என்ற ஆதிக்க வெறி இந்து மதத்தை உயர்த்தி பிடிக்கும்.

மக்கள் விரோத மதவெறி பாஜக ஆட்சியில் , தற்போது நீட் தேர்வு என்பது மருத்துவம் பயில சமஸ்கிருதம் தேவை என்பதின் பொருளாக தான் விளங்கி வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக முதன் முதலில் களம் இறங்கி எழுச்சியை உண்டாக்கியது திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான்.

நீட் தேர்வுக்கு எதிராக அனிதா முதல் எண்ணற்ற சாதனை மருத்துவ மேதைகளை நாம் இழக்க நேரிட்டது. அப்படி இருந்தும் விடாப்பிடியாக இறுமாப்புடன் நடந்து கொண்டது பாஜக அரசு.

நீட் தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானதையும், முறைகேடுகள், நீட் எதிர்ப்பு என்று உரத்த குரலில் ஒரு மாதத்திற்கும் மேலாக, தலைநகர் டில்லியில் மாணவர்கள் மற்றும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பு சார்பில் கடும் போராட்டம் நடைபெற்று, பாஜக அரசின் செயலற்ற நிர்வாகத் திறமை வெளிவந்தது.

போராட்டத்தின் விளைவாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமது பதவியை விட்டு விலகினார்.

ஒன்றிய பாஜக அரசின் கல்வி அமைச்சர் பதவி விலகல் என்பது வெற்றி என்றாலும் ‘நீட் தேர்வு ரத்து’ என்பது தான் திராவிட இயக்கத்திற்கான வெற்றியாகும். அதைத் தான் திராவிடர் கழகம் தொடர்ந்து செய்து வருகிறது.

தமிழ்நாடெங்கும் இருசக்கர வாகனத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகிறது.

டில்லியில் நடைபெற்ற ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ போராட்டம் என்பது, தமிழ்நாட்டில் ஹிந்தி மொழிக்கு எதிராக மாணவர்கள் வெகுண்டெழுந்து மாற்றம் தந்தார்கள்.அதைப் போன்று தான் தற்போது ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் பதவி விலகல் என்பதும்.

இந்தியாவின் அனைத்து மாநிலத்திற்கும் தமிழ்நாடு தான் வழிகாட்டும் எப்போதும். மொழிப் போராட்டம் துவங்கி தற்போது வரை அனைத்து வகைகளிலும்.

தமிழ்நாட்டின் மொழிப் போராட்டத்தின் விளைவாக காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டு சாதனை படைத்தது.

அதைப் போன்று தான் தற்போது  பாஜக அரசின் கல்வி அமைச்சர் பதவி விலகல் என்பதும்.

இது பாஜக அரசின் தோல்வியின் அடையாளம். விரைவில் பாஜக ஆட்சி அகற்றும் படலம் தொடரும்.

நீட் தேர்வுக்கு எதிராக இந்தியாவையே களம் இறங்க செய்த பெருமை, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இயக்கங்களுக்குத் தான் என்பது பெருமைப்படத்தக்கதாகும்.

திராவிட இயக்கம் தான் நாட்டிற்கே வழிகாட்டும், அதன் ஒளியில் தான் வழிதொடர்கிறது.

‘நீட் தேர்வு ரத்து’ என்ற நிலை வரும் வரை திராவிடர் கழகத்தின் களப்பணிகள் தொடரும்,

மானமிகு ஆசிரியர் அவர்களின் கட்டளையை நிறைவேற்றுவோம்

வெல்வோம் உறுதியாக.

‘விடுதலை’ வாசகர்

– அன்புமணி சுந்தரராசன், மதுரை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *