மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் சாதனை!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திருச்சி, ஜூலை 28- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கோவை யுனைடெட் மருந்தியல் கல்லூரி இணைந்து மருந்தியல் கல்லூரிகளுக்கிடையிலான அய்ந்தாவது மாநில அளவிலான விளையாட்டுப்போட்டியினை நடத்தியது.

இதில் 22.07.2026 முதல் 23.07.2026 வரை நடைபெற்ற போட்டிகளில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இரண்டாமாண்டு மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவி சி.கனகவள்ளி 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் இரண்டாமிடத்தினையும் இளநிலை மருந்தியல் நான்காமாண்டு மாணவிகள் வி.பிரியங்கா மற்றும் எஸ்.மதுமதி ஆகியோர் வளையப் பந்து (Tennikoit) போட்டியில் மூன்றாமிடத்தினையும் பெற்று பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெற்றிக்கோப்பைகளை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா.செந்தா மரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 55 மருந்தியல் கல்லூரிகளிலிருந்து 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டதில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் பரிசு வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *