டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் அரசு நிறுத்தியதை அடுத்து, ஈரானும் தாக்குதலை நிறுத்தியுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேர்தல் அரசியலில் இருந்து விலகினார் கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா!
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மாணவர்கள் போராட்டத்தின் போது உயிரை பறிக்கும் தாக்குதலை நடத்த அனுமதி தந்தது நீங்களா? அமித்ஷாவிடம் ராகுல் காந்தி கேள்வி. டில்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் காவல்துறை வன்முறை: நாடாளுமன்றத்தில் மோடி அரசை எதிர்க்கட்சிகள் முற்றுகையிட திட்டம்; பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தல்
தி இந்து:
* நீட், என்.டி.ஏ.வை ரத்து செய்யக்கோரி மாணவர் இளைஞர் கூட்டமைப்பு பேரணி. டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு நடவடிக்கை எடுக்கவும், மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* கங்கையில் கோழிக்கறி சாப்பிட சட்டத் தடை இல்லை” – உச்சநீதிமன்ற நீதிபதி: போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், போராட்டம் அல்லது கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியதற்காக பொதுமக்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதும், ஜாமீன் வழங்குவதில் தாமதமும் கவலைக்குரியது என்றார். ரமலான் நோன்பு திறந்த போது கங்கையில் படகில் கோழி பிரியாணி சாப்பிட்டதாக 14 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி, “கங்கையில் கோழிக் கறி சாப்பிடுவதை தடை செய்யும் எந்தச் சட்டமும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
– குடந்தை கருணா
