கிருட்டினகிரி மாவட்டத்தில் ஒன்றியம்தோறும் புதிய கிளைக் கழக அமைப்புகள் கலந்துரையாடலில் தீர்மானம்

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கிருட்டினகிரி, ஜூலை 25- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 19/07/2026 அன்று மாலை 4.00 மணி யளவில் கிருட்டினகிரி பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திரா விடமணி தலைமை வகித்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் வ. ஆறுமுகம், மாநில மகளிரணி துணைச் செயலாளர் மு. இந்திராகாந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட ப.க. செயலாளர் க.வெங்கடேசன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மா.சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்துப்பேசினர்.

கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர். காஞ்சி பா.கதிரவன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத்தலைவர் ம.கவிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சேலத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எடுத்துக் கூறி கருத்துரையாற்றினார்.

கூட்டத்தில் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முருகேசன், இல.ஆறுமுகம், மேனாள் மாவட்டத் தலைவர் பெ.மதிமணியன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் மு.வேடியப்பன், ஊற்றங்கரை ஒன்றிய ப.க. தலைவர் இராம.சகாதேவன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நா.சிலம்பரசன், துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இர.அஜய்குமார், கிருட்டினகிரி நகரச் செயலாளர் அ.கோ.இராசா, காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றிய செயலாளர் பையூர் பெ.செல்வேந்திரன், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, ஊற்றங்கரை ஒன்றிய துணைத் தலைவர் காரப்பட்டு ப.இரமேசு உள்ளிட்ட நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர். வேப்பனப்பள்ளி ப.க.நிர்வாகி ஆர்.எம்.ஜெயின், ஆ.ஆல்பிரட் ஐன்ஸ்டீன், மாணவர் கழகம் மா.ரூபிகாசிறீ, பெரியார் பிஞ்சுகள் கா.ஆ.நிறை தமிழ், கா.ஆ.நிறைகதிர் உள்பட கழகத் தோழர்கள் கலந்துக்கொண்டனர்.

நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

கிருட்டினகிரி மாவட்ட மேனாள் இளைஞரணிச் செயலாளர் கீழ்குப்பம் இல.குமார் தாயார் பாஞ்சாலையம்மையார் மறைவிற்கும், பாரூர் அரசம்பட்டி காந்திநகர் கழக ஆர்வலர் விடுதலை வாசகர் வழக்குரைஞர் தீ.விவேகானந்தன் தந்தையார் தீர்த்தகிரி மறைவிற்கும், மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன் மாமனாரும் கோ.சுமதியின் தந்தையுமான காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) கோவிந்தராசன் மறைவிற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

சேலத்தில் கடந்த 04/07/2026இல் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும் இம்மாவட்டக் கூட்டம் ஒருமனதாக ஏற்று செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.

நீட் தேர்வையும், உயர்ஜாதியின ருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிடர் மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்பரைப் பயணம் ஆறு குழுக்கள் வருகின்ற 30/07/2026இல் தொடங்கி 02/08/2026 – வரை நடை பெறும். இப்பயணக்குழுவினர் கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர், காவேரிப்பட்டணம், பையூர் ஆகிய பகுதிக்கு 31/07/2026- அன்று இரு சக்கர வாகன பரப்புரை பிரச்சாரக்குழு வருகையின்போது மாவட்டக் கழகம் சார்பில் பயணக் குழுவினருக்கு சிறப்பான வகையில் வரவேற்று வழியனுப்புவது என தீர்மானிக்கப்படுகிறது.

கிருட்டினகிரி மாவட்டத்தில் ஒன்றியங்கள் தோறும் குறைந்த பட்சம் மூன்று மாதத்திற்குள் திராவிடர் கழக ஒரு புதிய கிளைக் கழக அமைப்புகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமாய் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக (பொறுப்பு மாவட்ட) மாநில ப.க. அமைப்பா ளர் அண்ணாதுரை அனுமதியுடன் கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக புதிய அமைப்பாளராக ஊற்றங்கரை இராம.சகாதேவனை, மாநில ப.க. அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன் அறிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *