1500 ஆண்டுகாலக் கல்வியறிவின்மை இருளும், சாமானிய மக்களின் அவலமும்: சவேரியார் கடிதம் காட்டும் சான்று!

1 Min Read

இந்தியத் தீபகற்பத்தில் 1,500 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாமானிய உழைக்கும் வர்க்க மக்கள் கல்வியறிவின்மை எனும் இருளிலேயே வைக்கப்பட்டிருந்தனர் என்பதற்குப் பதினாறாம் நூற்றாண்டில் (1500-களில்) இந்தியா வந்த இயேசு சபை ஊழியர் ‘புனித’ சவேரியாரின் கடிதங்கள் ஒரு சிறந்த வரலாற்றுச் சான்றாகும்.

ரோமில் உள்ள தன் நண்பர்களுக்கும், மனப்பாடில் இருந்து பிற ஊர்களில் பணியாற்றிய தன் சக ஊழியர்களுக்கும் சவேரியார் போஸ்க் மொழியில் எழுதிய கடிதங்கள், “சவேரியார் கடிதங்கள்” என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு பாளையங்க்கோட்டையில் உள்ள நாட்டார் வழக்காற்றியல் மன்றத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

புன்னக்காயல் கடிதம் கூறும் உண்மை!

சவேரியார், புன்னக்காயலில் இருந்து ஹென்றிக்ஸ் என்ற தனது சக ஊழியருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் அன்றைய மக்களின் பரிதாப நிலையைச் சுட்டிக்காட்டுகிறார்:

“இப்பகுதி மக்கள் விவசாயக் கூலி கொடுக்கும் போது கூழாங்கற்களை எண்ணிக்கையாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால், கணக்கர் மக்களை ஏமாற்றுவதற்காக, ஒரு படி கூலிக்கு ஒரு கல்லுக்குப் பதிலாக இரண்டு கற்களைக் கணக்கில் போட்டு, கூலியைக் குறைத்துக் கொடுத்து ஏமாற்றுகிறார். மக்களுக்குச் அடிப்படை எண்ணறிவு மற்றும் கல்வியறிவு இல்லாததால், தாங்கள் ஏமாற்றப் படுகிறோம் என்பதைக் கூட அறிய முடியாத அவல நிலையில் உள்ளனர்.”

கல்வியறிவு மறுக்கப்பட்டதால் சாமானிய உழைக்கும் வர்க்க மக்கள் எவ்வாறு அன்றாட வாழ்வில் சுரண்டலுக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளானார்கள் என்பதைச் சவேரியாரின் இந்தக் கடிதம் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *