ராமன் கோயில் காணிக்கை திருட்டு புதிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஜூலை 24 அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் புதிய சிறப்பு புல னாய்வுக் குழு (எஸ்அய்டி) அமைக்கும் பணியை உ.பி. அரசு தொடங்கியுள்ளது.

அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டு குறித்து விசாரணை நடத்த உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்திடம் கடந்த ஜூன்
13-ஆம் தேதி சிறீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கோரிக்கை விடுத்தது. இதையடுத்து லக்னோ மண்டல ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த் தலைமையில் மூன்று பேர் கொண்ட எஸ்அய்டி-யை உ.பி. அரசு அமைத்தது.

எஸ்அய்டி தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையில் திருட்டு நடந்ததை உறுதி செய்தது. இதன் அடிப்படையில் ஜூன் 23ஆம் தேதி அயோத்தியில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இவ்வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், காணிக்கை திருட்டு வழக்கில் புதிய எஸ்அய்டி அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த 20.7.2026 அன்று  உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, மூத்த அய்பிஎஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் புதிய எஸ்அய்டி அமைக்க தலைமை நீதிபதி சூர்யகாந்த் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை, விசாரணையை ஒரு தீர்க்கமான கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் காணிக்கை திருட்டு குற்றவியல் வழக்கை விசாரிக்க தற்போது, புதிய எஸ்அய்டி அமைக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தப் புதிய சிறப்பு புலனாய்வுக் குழுவில், காவல்துறை துணைத் தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நிலை யிலான அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் குழுவில் இடம்பெற்றிருந்த லக்னோ மண்டல அய்ஜி கிரண் இதிலும் சேர்க்கப்படுவார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 27-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *