வாரணாசி, மதுரா, சம்பல் மசூதி வழக்கு உச்சநீதிமன்ற பரிந்துரையை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு!

புதுடில்லி, ஜூலை 23- உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இருக்கும் இடம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்குகளை பொதுப்படையாகப் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

ஆனால், இந்த வழக்கு கள் நீதிமன்றத்தின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று 3 வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் தெரிவித்து விட்டனர்.

இதுகுறித்து பொதுப்படையாகப் பேசுவது வாராணசி ஞானவாபி மசூதி தரப்பு வழக்குரைஞர் அக்லாக் அகமது கூறுகையில், “பொதுப்படையாகப் பேசுவது என்பது மசூதியை இந்து தரப்பினரி டம் ஒப்படைப்பதையே குறிக்கும்.

எனவே, அதன் மூலம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வாய்ப்பில்லை. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறிவிட்டேன்.

இந்து தரப்பினர் கூறுவது போல இடிக்கப்பட்ட எந்தவொரு கோயிலின் இடத்திலும் இந்த மசூதி கட்டப்படவில்லை.

இதனால், மசூதியையும் அதன் நிலத்தையும் எதிர்தரப்பினரிடம் ஒப்படைக்கும் கேள்வியே எழவில்லை. எனவே, சட்டப்படி நீதிமன்றமே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் இலியாஸ் கூறியதாவது:

கடந்த 1991இல் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு இயற்றியது. அதன் அடிப்படையில், 2019இல் பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு, மசூதிகள் உள்ளிட்ட எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையையும் மாற்றுவதற்கான மனுவை நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது.

கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அதே நிலை தொடர வேண்டும்.

அதை மாற்ற முடியாது என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஒரு சொத்து மசூதியாக இருந்தால், அதன் மீது உரிமை கோருவதற்கோ அல்லது அதன் மதத் தன்மையை மாற்றுவதற்கோ நீதிமன் றத்தில் முறையிட முடியாது.

எனினும், மசூதிகளின் மதத் தன்மையை மாற்றக் கோரும் இந்து மனுதாரர் களின் மனுக்களை உச்ச நீதிமன்றம் அனுமதித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சம்பல் ஷாஹி ஜமா மஸ்ஜித் வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞர் காசிம் ஜமால், செய்தி யாளர்களிடம் கூறுகையில், “பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான கேள்வியே எழவில்லை.

ஏனெனில், எதிர்தரப் பினருக்கு மசூதி மீது சட்ட ரீதியான அல்லது வேறு எந்த வகையிலான உரிமையும் இல்லை.

அனைத்து ஆதார ஆவணங்களும் மசூதிக்குச் சாதகமாகவே உள்ளன. கெட்டவாய்ப்பாக நீதிமன்றமும் அவர்களின் ஆதாரமற்ற மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

இது நீதித்துறை நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தி மசூதியின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சி” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *