55.49 கோடியை எட்டிய யுபிஅய் பயனர்களின் எண்ணிக்கை!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 21- இந்தி யாவில் யுபிஅய் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 55.49 கோடியை எட்டியுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஅய் பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஅய் செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஅய் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் நடப்பு ஆண்டின் ஜூன் மாத தகவலின் படி நாட்டில் யுபிஅய் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 55.49 கோடியை எட்டியுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக ஒன்றிய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்டார். என்பிசிஅய் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025-2026 நிதியாண்டில் யுபிஅய் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 24,161.69 கோடி என்றும், அதன் மதிப்பு ரூ.314.23 லட்சம் கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-2025 நிதியாண்டில் யுபிஅய் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 18,586.60 கோடியாகவும், அதன் மதிப்பு ரூ.260.56 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

யுபிஅய் பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானதாகவும், வெளிப்படைத் தன்மையோடும் இருக்க காலத்துக்கு ஏற்ப பல்வேறு முன்முயற்சியை ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஅய் மேற்கொண்டு வருவது குறிப்பிடத் தக்கது. மேலும், யுபிஅய் சேவை உலக முழுவதும் 13 நாடுகளில் (இந்தியாவையும் சேர்த்து) பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு ஒன்றிய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *