ஜப்பானின் ‘டகேடா பயோஃபார்மாசூட்டிகல்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள க்யூடெங்கா தடுப்பூசி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தால் இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல்

2 Min Read

* இந்த டெங்கு தடுப்பூசியை 4 முதல் 60 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் செலுத்திக் கொள்ளலாம்.

* 0.5 மி.லி வீதம் 2 டோஸ்களாக வழங் கப்படுகிறது. முதல் டோஸ் செலுத் திய 3 மாதங்கள் கழித்து இரண்டாவது டோஸ் செலுத்தப்பட வேண்டும்.

* இதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த டெங்கு தடுப்பூசிகளைப் போல, குருதிப் பரிசோதனை செய்து ‘முன்பு டெங்கு வந்திருக்கிறதா’ என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை. டெங்கு காய்ச்சல் முன்பு வந்தவர்களுக்கும், வராதவர்களுக்கும் இதை பாதுகாப்பாகச் செலுத்தலாம்.

* டெங்குவை உருவாக்கும் 4 வகையான வைரஸ்களுக்கு எதிராகவும் (DENV-1, DENV-2, DENV-3, DENV-4) இது பாதுகாப்பு அளிக்கிறது.

*டெங்கு காய்ச்சலால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் நிலையை 84 சதவீதம் – 90 சதவீதம் வரை குறைக் கிறது.

* இந்தியாவில் தடுப்பூசி தட்டுப் பாடின்றி கிடைக்க, அய்தராபாத்தைச் சேர்ந்த ‘பயோலாஜிகல் ஈ’ (Biological E) நிறுவனத்துடன் டகேடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

* பிரான்சின் ‘சனோஃபி பாஸ்டர்’ (Sanofi Pasteur) நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட உலகின் முதல் டெங்கு தடுப்பூசி இதுவாகும்.

* 9 முதல் 16 (சில நாடுகளில் 45) வயது வரம்பிற்குட்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.

* முன்பு ஒருமுறையாவது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இத்தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.

* முன்பு டெங்கு வராத ஒருவ ருக்கு இத்தடுப்பூசியைச் செலுத்தி னால், எதிர்காலத்தில் அவருக்கு முதன்முறையாக உண்மை டெங்கு தொற்றும்போது, அது தீவிரமான டெங்குவாக (Severe Dengue) மாறக்கூடிய ஆபத்து இருந்தது. இதனால் இதன் பயன்பாடு பெருமளவில் கட்டுப் படுத்தப்பட்டது.

* டெங்கு வைரஸில் 4 வகைகள் (Serotypes) உள்ளன. ஒருமுறை ஒரு வகை டெங்கு வந்தால், உடலுக்கு அந்த குறிப்பிட்ட வகைக்கு மட்டும் வாழ்நாள் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்; ஆனால் மற்ற 3 வகைகளால் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

* க்யூடெங்கா போன்ற வீரியம் குறைக்கப்பட்ட நேரடித் தடுப்பூசிகள் (Live-attenuated vaccines), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒரே நேரத்தில் 4 வகை வைரஸ்களுக்கும் எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கத் தூண்டுகின்றன.

* உலக சுகாதார அமைப்பு (WHO) டெங்கு பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் க்யூடெங்கா தடுப்பூசியைப் பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.

* தடுப்பூசி டெங்குவின் தீவிரத்தைக் குறைத்து உயிராபத்திலிருந்து காப்பாற்றி னாலும், அது கொசுக்கடிகளை முற்றிலும் தடுக்காது. எனவே நிலத்தடி நீர் தேங்குவதைத் தடுப்பது, கொசு உற்பத்தி இடங்களை அழிப்பது மற்றும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கைகள் எப்போதும் அவசியம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *