விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை!

1 Min Read

திருச்சி, ஜூலை 19- விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனைகள் படைத்து பரிசு, பதக்கங்களைக் குவித்துள்ளனர்.

11ஆம் வகுப்பு மாணவி பி.ஹாஃபிஷா பர்வீன் 18ஆவது மாவட்ட அளவில் நடைபெற்ற Wushu Championship போட்டியில் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கமும், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவிற்கான மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

11ஆம் வகுப்பு மாணவி டி.யோகதர்ஷினி 19ஆவது ஜூனியர் தடகளப்போட்டியில் 100மீ. மற்றும் 80மீ. தடைத்தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

10ஆம் வகுப்பு மாணவி சங்கமித்ரா 5 கி.மீ. மாரத்தான் போட்டியில் பங்குபெற்று பதக்கமும் சான்றிதழும் பெற்றார்.

குறுவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 19 வயதிற்குப்பட்ட மாணவிகள் பிரிவில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவிகள் பா.தேவதர்ஷினி முதலிடமும் மற்றும் ரீ.அம்ரீன்பானு இரண்டாம் இடமும் பெற்றனர்.

அதைத்தொடர்ந்து 17 வயதிற்குப்பட்ட மாணவிகள் பிரிவில் 9ஆம் வகுப்பு வி.சஹானா முதலிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.

இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல் களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *