திருச்சி, ஆக.13- மண்டல அளவிலான போட்டியில் ஒட்டுமொத்த வாகையர் பட்டத்தைத் தட்டிச் சென்ற பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்!
திருச்சி,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவ-மாணவிகள், அண்மையில் நடைபெற்ற மண்டல அளவிலான சிலம்பப் போட்டிகளில் தங்களது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி, பல்வேறு இடங்களை வென்றதோடு ‘ஒட்டுமொத்த வாகையர் பட்டம்’ (Overall Championship) வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
பாரம்பரியக் கலையான சிலம்பத்தில் ஆர்வம் காட்டிச் சிறந்து விளங்கும் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளின் வெற்றி விவரம் வருமாறு:
முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றவர்கள்:
அஜ்மல் (7-ஆம் வகுப்பு)
ஹரிஷ் (7-ஆம் வகுப்பு)
ஆரிஃப் அக்தர் (11-ஆம் வகுப்பு)
சிறீ சஞ்சய்ராம் (10-ஆம் வகுப்பு)
கவின் (7-ஆம் வகுப்பு)
கிரித்திக் வாசன் (7-ஆம் வகுப்பு)
முகமது ரஷித் (12-ஆம் வகுப்பு)
சிறீ ஹரி ராம் (7-ஆம் வகுப்பு)
மேற்கண்ட மாணவர்கள் அனைவரும் முதலிடம் பெற்று, எதிர்வரும் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தவர்கள்:
ஹரி பிரசாத் (10-ஆம் வகுப்பு) – இரண்டாம் இடம்
கீர்த்தனா (6-ஆம் வகுப்பு) – இரண்டாம் இடம்
தேவ் (7-ஆம் வகுப்பு) – இரண்டாம் இடம்
அனாஸ் முகமது (8-ஆம் வகுப்பு) – இரண்டாம் இடம்
ஜி.ஹரிஷ் (7-ஆம் வகுப்பு) – மூன்றாம் இடம்
கபில் (7-ஆம் வகுப்பு) – மூன்றாம் இடம்
ரோஷன் (10-ஆம் வகுப்பு) – மூன்றாம் இடம்
கவின் (10-ஆம் வகுப்பு) – மூன்றாம் இடம்
சாஷினி (12-ஆம் வகுப்பு) – மூன்றாம் இடம்
சாந்தினி (9-ஆம் வகுப்பு) – மூன்றாம் இடம்
மண்டல அளவிலான போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை எதிர்த்துப் போட்டியிட்டு ஒட்டுமொத்த வாகையர் பட்டத்தைக் கைப்பற்றிய மாணவ-மாணவிகளையும், அவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்து மெருகேற்றிய சிலம்பப் பயிற்சி ஆசிரியர் பத்மா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், சவுமியா, கோகுல் ஆகியோரையும் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் மனதாரப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதோடு, மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ-மாணவிகள் தொடர் சாதனைகள் படைக்கவும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
