தேசிய மாணவர் படை பத்து நாள் பயிற்சி முகாமில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வல்லம், ஆக. 1- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள், திருச்சி 3ஆவது தமிழ்நாடு வான்படைப் பிரிவு சார்பில், தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2026 ஜூன் 25 முதல் 2026 ஜூலை 04 வரை நடை பெற்ற பத்து நாள் சிறப்புப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ளனர்.

இப்பயிற்சி முகாமில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிக் கனிகளைப் பறித்துள்ளனர்:

தனுஷ்யா ஆர்: நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சிறீமதி எஸ்: ஓவியப் போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சாந்தினி பி: குறிபார்த்துச் சுடுதல் போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அரிஹரன் எஸ்: நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

யுவசிறீ பி: தனிப்பாடல் போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மாணவர்கள் அனைவரும் மிகச்சிறந்த முறையில் பயிற்சி பெறத் தூண்டுகோலாகவும், உறுதுணையாகவும் இருந்த தேசிய மாணவர் படை பொறுப்பாசிரியர் இ.மனோன்மணிக்கும், சாதனை படைத்த அன்பு மாணவர்களுக்கும் பள்ளி  நிர்வாகம், தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள்  சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *