61 ஆண்டுகளுக்கு பிறகு பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது முதியவர்!

1 Min Read

பாலக்காடு, ஜூலை 13- கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி (வயது 77). இவர் கடந்த 1965-ஆம் ஆண்டு ஆலத்தூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் அவர் மதுரையில் உள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர் அவர் ஆலத்தூர் நூலகத்தில் உறுப்பினராகி, புத்தகங்கள், நாளிதழ்களை வாசித்து வந்தார். இதன் மூலம் கிருஷ்ணன் குட்டி, கல்வி கற்க வயது தடை இல்லை என கருதி உயர்கல்வியை தொடர ஆலத்தூர் வட்டார எழுத்தறிவு மய்யத்தில் சேர்ந்தார். அங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடந்த வகுப்புகளில் கலந்துகொண்டு பாடங்களை படித்து வந்தார்.

இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு முடித்து 61 ஆண்டுகள் ஆன நிலையில் பிளஸ்-1 தேர்வில் 74 சதவீத மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணன் குட்டி தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது அவர் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளார். இந்த தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 1-ஆம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றால் பட்டப்படிப்பு படிப்பேன் என்று கிருஷ்ணன் குட்டி கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *