பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை சிறப்புக் கலந்தாய்வு இன்று தொடக்கம்!

2 Min Read

சென்னை, ஜூலை 13– பொறியியல் மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளிகளில் படித்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான இணைய தள கலந்தாய்வுடன் இன்று (13.6.2026) தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற 484 கல்லூரி களில் உள்ள 2,65,594 இடங்களுக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு மேற்கொள்கிறது. இந்தாண்டு பொறியியல் கலந்தாய் வுக்கு 2,45,235 மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்து பதிவு கட்டணம் செலுத்தினர்.

அதன்படி, 1,30,767 மாணவர்களுக்கும், மாணவிகள் 1,05,245 பேருக்கும் மற்றும் மூன்றாம் பாலினத் தவர் 5 பேர் என ஒட்டு மொத்தமாக 2,36,017 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று (13 ஜூலை) பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்தாண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்ற 46,604 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டனர்.

விளையாட்டு பிரிவின் கீழ் 3,210 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர் பிரிவின் கீழ் 1,175 மாணவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 493 மாணவர்களுக்கும் கலந்து கொள்ளவுள்ளனர்.  இன்றைய நாள் அரசு பள்ளி மாணவர் களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கு(விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணு வத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள்) ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. 3 சுற்றுகளாக இந்தக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதில் 38 இடங்கள் உள்ள விளையாட்டு வீரர்கள் பிரிவில் 504 பேர் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர், 150 இடங்கள் உள்ள முன்னாள் ராணுவத் தினரின் வாரிசுகளுக்கு 14 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 5 சதவீத உள் ஒதுக்கீடாக அரசுப் பள்ளிகளில் படித்து மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கான இட ஒதுக்கீட்டில் சுமார் 149 மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங்கை இன்று (13.7.2026) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மேற்கொள்ளலாம்.

இவர்களுக்குக் கல்லூரி தற்காலிக இட ஒதுக்கீடு ஜூலை 14ஆம் தேதி காலை 7 மணிக்கு வெளியிடப்படும். அப்போதில் மாலை 5 மணிக்கு உள்ளாக, கல்லூரியை மாணவர் இறுதி செய்ய வேண்டும். இந்தாண்டு, சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தலில் (ஓ.எஸ்.எம்) ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளதால், அதிகபட்ச கட்-ஆஃப் போட்டிகளில் சி.பி.எஸ்.இ மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எனவே கட்-ஆஃப் மதிப்பெண் 1-10 வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் மாணவர்கள் தங்கள் கட்-ஆஃப் மதிப்பெண்களுக்கு ஏற்றார்போல கல்லூரிகளை முன்கூட்டியே பட்டியலிட்டு சாய்ஸ் லிஸ்ட் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டுமென கல்வியாளர்கள் கூறுகின்றனர். மாணவர்கள் தேர்வு செய்யக்கூடிய கல்லூரிகளில் கட்டணம் எவ்வளவு என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், கல்வி கட்டணம் மட்டுமே அரசு நிர்ணயம் செய்யும்,

மற்றபடி போக்குவரத்து செலவு, விடுதி, மதிய உணவு உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமென தெரிவித்துள்ள கல்வியாளர்கள், கட்டணம் கட்டுவதற்கு 5 நாட்கள் நேரம் கொடுத்தால் இறுதி நாட்களில் செல்லாமல், முதல் நாளிலேயே சென்று, கட்டணம் விடுதிக்கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை குறித்து விரிவாக விசாரித்து தெரிந்துகொண்டால் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *