குலசேகரன்பட்டினம், அக்.7– குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, கோவில் கடற்கரை யில் ‘புனித‘ நீர் எடுக்க சென்றனர். அப்போது இரு தரப்பு பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஒருவரை ஒருவர் கம்பாலும், கைகளாலும் தாக்கிக் கொண்டனர். இதனைப் பார்த்த சக பக்தர்கள் கூச்சலிட்டனர். உடனே இரு தரப்பினரையும் அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர். கடற்கரையில் பக்தர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்ட காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதுதான் கடவுள் பக்தி இலட்சணம் குலசேகரன் பட்டினத்தில் பக்தர்கள் அடிதடி!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
