‘நீட்’ எதிர்ப்புப் பேரணி- நூல் அறிமுக விழா தூத்துக்குடி கழக கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

தூத்துக்குடி, ஜூலை 11– 19.7.2026இல் ப.க.சார்பி்ல் நூல் அறிமுக விழா 30.7.2026இல் நீட் எதிர்ப்பு பேரணிக்கு வரவேற்பு முத்தையாபுரத்தில் தெருமுனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டக் கழக கலந்துரையாடல்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
10.7.2026அன்று மாலை ஆறுமணிக்கு தூத்துக்குடி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் பெரியார் மய்யத்தில் உற்சாகமாக நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மு.முனிய சாமி தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் கோ. முருகன் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் செய லாக்கவுரையாற்றினார்.

தமிழ்நாடு
சேலம் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒவ்வொன்றையும் விளக்கியும், தமிழர் தலைவரின் அயரா பணிகள் பற்றி எடுத்துரைத்தும், கழக காப்பாளர் மா.பால்இராசேந்திரன் உரையாற்றினார்.
நிகழ்வில் மாவட்ட ப.க. செய லாளர் சொ.பொன்ராஜ், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் த.நாகராசு,
மாநகரதலைவர் த.பெரியார் தாசன், கே.கோபால்சாமி ,ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
புதிய பொறுப்பாளர்களாக மாவட்ட திராவிடர்கழக இணைச் செயலாளர் – மு.பாலமுருகன்
மாநகரசெயலாளர் – த.செல்வ ராசு
மாவட்ட இளைஞரணிதலைவர் – அ.பிரகாசு ஆகியோருக்கு மாவட்டக் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.நவீன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *