தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 18-ஆம் தேதி தொடங்குகிறது ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரை நிகழ்த்துகிறார்

1 Min Read

சென்னை, ஜூன் 11 தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறவுள்ள முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற ஜூன் 18ஆம் தேதி தொடங்குகிறது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மரபுப்படி ஆளுநர் உரையுடன் இதற்கான நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன.

ஆளுநர் உரை

இதையொட்டி, சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து, கூட்டத் தொடரில் பங்கேற்று உரையாற்றுமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

முழுமையான பட்ஜெட் தாக்கல்

கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையாற்ற உள்ளார். கடந்த அரசின் கடைசி கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசு தனது முதல் முழுமையான பட்ஜெட்டை இந்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிகிறது.

விறுவிறுப்பாகும் பேரவை

புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் சட்டமன்றத்தில் பல்வேறு விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக:

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், மாநிலம் முழுவதும் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினை,

உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை சட்டப்பேரவையில் எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பட்ஜெட் தாக்கல் மற்றும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளால் இந்த முதல் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *