ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசையில் திறப்பு விழாவுக்கு தயாராகும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு மய்யம்

2 Min Read

ராமேசுவரம், ஜூலை 11– ராமேசுவரம் அருகே பிரப்பன் வலசையில் ரூ.42.90 கோடி மதிப் பீட்டில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு மய்யம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.

தமிழ்நாட்டில் 1,076 கி.மீ நீளத்துக்கு கடற்கரை அமைந்துள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக தெற்கே மன்னார் வளைகுடா, வடக்கே பாக் நீரிணை என 237 கி.மீ நீளத்துக்கு இரண்டு கடல்கள் அமைந்துள்ளது.

இதில் தனுஷ்கோடி, ராமேசுவரம் பாம்பன், பிரப்பன்வலசை ஆகிய கடற்கரை பகுதிகளில் அலைச்சறுக்கு, நீச்சல், துடுப்பு படகு, பெடல் படகு, உள்ளிட்ட பல்வேறு நீர் விளையாட்டு களுக்கு ஏற்ற இடங்களாக உள்ளன.

இந்த இடங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நீர் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்து தனியார் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நீர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரையிலான இந்திய-இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான பாக் நீரிணை பகுதியை ஆண்டு  தோறும் நீச்சல் வீரர், வீராங்கணைகள் தனியாகவோ குழுவாகவோ ரிலே மற்றும் மராத்தான் முறையிலும் நீந்தி கடக்க ஆண்டு தோறும் வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2024 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையின் அப்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில்  ஒலிம்பிக் நீர் விளையாட்டு மய்யம் அமைக்கப்படும், என அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரையில் நீர் விளையாட்டு வல்லுநர்கள் மூலம் கடல் நீரின் தரம், தண்ணீரின் ஓட்டம், காற்றின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இங்கு ஒலிம்பிக் நீர் விளையாட்டு மய்யம்  அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.42.90 நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த ஒலிம்பிக் நீர் விளையாட்டு மய்யத்தில், தங்குமிட வசதி (ஹாஸ்டல்), ஜிம், வாட்டர் ஸ்போர்ஸ் சென்டர், செயில் போட் பார்க்கிங் (sail boat parking), யோகா அறை, போட் ஹாங்கர், திறந்தவெளி ஓய்விடம், வேர்ல்டு கிளாஸ் டிரையினிங் கம் கோச்சிங் அகாடமியும் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும், இந்த அகாடமியில் செயிலிங், கேனோயிங், சர்ப்பிங், கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ர்டப் பேடில் போன்ற விளையாட்டுகளுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.

உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை நடத்துவது மட்டுமின்றி, பயிற்சி பெறுவதற்காக ஏராளமான வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, பிரப்பன்வலசையில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு மய்யம்  கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *