‘கலைமாமணி’ அ.மறைமலையான் (வயது 95)

2 Min Read

‘கலைமாமணி’  அ.மறைமலையான் (வயது 95)

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு நகர் வடக்குப் புறம் அமைந்துள்ள கண் ணந்தங்குடி மேலையூர், நடுத்தெரு மண்கொண்டார் பகுதியில் ”மகாராசா இல்லம்” என்பதைத் தாயகமாகக் கொண்ட சொற்பொழிவு ஆளர்
க.து. அய்யாவு மண்கொண்டார் நாட்டாண்மைக்காரருக்கும், முத்தம்மாள் அம்மையாருக் கும் மகன் எனப் பிறந்தவர் அ.வேதாசலம். இவர்தம் புனைப்பெயர், மறைமலையான்.

கண்ணந்தங்குடி மேலையூர் மற்றும் கீழையூர் ஊராட்சி தொடக்கப் பள்ளிகளில் படித்தார். அடுத்து ஒரத்தநாடு நகர் சரபோஜி மன்னர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) ஆண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் எனத் தேர்வு அடைந்தார். அதற்காக, ஒரு சவரன் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார்.

தமிழ் அறிஞர் கி.வா.ஜகந்நாதன் ஆசிரியர் பொறுப்புடன் வெளிவந்த ‘கலைமகள்’ மாத இதழ் நடத்திய ஞாயிற்றுக்கிழமை சிறுகதைப் போட்டியில் இவர் முதல் பரிசு வென்றார். அனைத்து இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் இவரது ‘காட்டு மல்லிகை’ நாடகம் முதல் பரிசு அடைந்தது.

‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விருது’ [ரூபாய் ஒரு இலட்சம் தொகையை முத்தமிழறிஞர் கலைஞர் இவருக்கு அளித்தார்.] ‘கலைமாமணி விருதையும்’ வழங்கினார்.

முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதா இவரது ‘ஒரு தமிழ்ப்பூ தவிக்கிறது!’ என்னும் காவியத்திற்கு முதல் பரிசு தந்தார். முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர், இவர் தீட்டிய ‘அன்னை தெரசா’ நூல் உயர்நிலைப் பள்ளிகளில் பாட நூல் ஆக அனுமதி கொடுத்தார்.

இவர் படைத்த ‘பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு’ என்னும் வாழ்க்கை வரலாறு நூலகங்கள் எல்லாவற்றிலும் இடம் பிடித்திருக்கிறது. கண்ணந்தங்குடி கீழையூர் ‘கர்ணம்’ என்னும் அரசு கணக்குப் பிள்ளை பணியாற்றிய உறவினர் பெரியவர் சாமிநாத வாணாதிரையர் அவர்களே, இவரது வாழ்க்கை வழிகாட்டி. வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் இயற்றிய ‘திருஅருட்பா’ – சிறு பதிப்பு நூலை முதலில் தந்து இவரைப் படிக்கத் தூண்டினார். அவர்தம் மகன் வழக்கறிஞர் சா.அப்பு அவர்களே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் முதலான திராவிட இயக்கத் தலைவர்களின் ஒளிப்படங்களை முதலில் இவரிடம் காட்டி அந்த இயக்கத்தின் தொண்டர் எனவும் இவரை செயலாற்றச் செய்தார்.

திராவிடர் கழக உறுப்பினர் ஆன இவர் தந்தை பெரியார் அவர்களின் புகழ் மாலையைப் புனைந்து மகிழ்ந்தார். அந்தக் கழகத் தலைவர் மாண்புமிகு கி.வீரமணி, ‘விடுதலை’ நாளிதழ் செய்தி ஆசிரியர் குழுவில் இவரை அமர்த்தினார். ‘தந்தை பெரியார் – தளபதி அண்ணா’ என்னும் படைப்பு இவரது இயக்கப் பற்றைப் போற்றும்.

வேதாசலம் வடித்த முதல் படைப்பு

‘கத்தரிக்கோல்’ சிறுகதையை திருக்குறளார் வி.முனுசாமி வெளியிட்டு ஊக்கம் ஊட்டினார்.

– அ.வேதாசலம் (அ. மறைமலையான்)

பிறந்த நாள்: 8.7.1932

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *